சத்தமே இல்லாமல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நிகழ்த்திய உலக சாதனை..!

சத்தமே இல்லாமல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நிகழ்த்திய உலக சாதனை..!Indian spinners got all 10 wickets first time in t20

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என தொடரை கைப்பற்றியது. ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Indian spinners record

இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னாய் 4, குல்தீப் மற்றும் அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப், ஆவேஷ், ஹார்டிக் பாண்டியா தலா 2 ஓவர்கள் வீசிய நிலையில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

சர்வதேச டி20 போட்டியில் இதுவரை எந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதே இல்லை. முதல் முறையாக இந்த சாதனையை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான பிஷ்னாய், குல்தீப் மற்றும் அக்சர் படேல் நிகழ்த்தியுள்ளனர்.