ஒத்த ஸ்டம்பையே 3 முறை பிடிங்கி எரிந்த பும்ரா; எதிரணிகளுக்கு அல்லு விடும் வீடியோ.!

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரானது 11 சீசன் முடிந்து 12வது சீசன் மார்ச் 23 அன்று துவங்குகிறது. இத்தொடர் முடிந்ததும் உலகக்கோப்பை போட்டியானது துவங்க இருப்பதால் அணிகளில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பை போட்டித் தொடரில் இடம் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பதால் ஒவ்வொரு போட்டிக்கும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் காலம் காலமாக இந்திய அணி பேட்டிங் பலத்தையே நம்பி இருந்தது என்ற நிலை மாறி சமீபகாலமாக பந்துவீச்சிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜடேஜா போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பதால்தான்.
குறிப்பாக தற்சமயம் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். இறுதிக்கட்டங்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த அவருக்கு ஆயுதமாக இருப்பது அவருடைய துல்லியமான யாக்கர் பந்துவீச்சு தான்.
Tonight, you can count s̶h̶e̶e̶p̶ yorkers to sleep 💤😴#CricketMeriJaan #OneFamily @Jaspritbumrah93 pic.twitter.com/ebVnfeh1KS
— Mumbai Indians (@mipaltan) March 20, 2019
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள பும்ரா வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது ஒத்த ஸ்டம்பை கொண்டு துல்லியமான யாக்கர் பந்துவீச்சால் மூன்று முறை அந்த ஸ்டம்பை பிடுங்கி எறிகிறார். உடனே அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் ஷேன் பாண்ட் அவரை கட்டித்
தழுவி பாராட்டுகிறார். அந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது.