தடை நீங்கியது; இங்கிலாந்தில் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் இந்திய வீரர்கள்! வெளியானது புகைப்படம்

தடை நீங்கியது; இங்கிலாந்தில் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் இந்திய வீரர்கள்! வெளியானது புகைப்படம்


Indian players with family at London

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

இந்த உலகக்கோப்பை தொடரில் கலந்துகொண்டுள்ள 10 அணிகளில் இந்திய அணி வீரர்களுக்கென்று பிசிசிஐ ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் மிகவும் முக்கியமானது வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்வது குறித்து தான்.

Virat Kohli

இங்கிலாந்திற்கு வீரர்கள் செல்லும் போது தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல கூடாது என கட்டுப்பாடு விதித்தது. மேலும் முதல் 20 நாட்களுக்கு அவர்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

இந்த கட்டுப்பாடு குறிப்பாக பாக்கிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தை கருத்தில் வைத்து தான் விதிக்கப்படடதாம். இந்நிலையில் தற்போது இந்த 20 நாள் தடை நீங்கியதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட துவங்கிவிட்டனர்.


நேற்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் லண்டன் ஓல்ட் பாண்ட் தெருவில் சென்றபோது ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஷிகர் தவான் தனது குடும்பத்தினர் மற்றும் ரோகித் சர்மாவின் குடும்பத்தினர் ரயிலில் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.