அனல் பறக்கும் ஆட்டத்தில், அடுத்தடுத்து சாதனை படைத்த இந்திய வீரர்கள்!.

அனல் பறக்கும் ஆட்டத்தில், அடுத்தடுத்து சாதனை படைத்த இந்திய வீரர்கள்!.



indian-players-got-new-record


இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நேப்பியர் நகரில் உள்ள மெக்லேன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் துவக்க மட்டையாளர்களான மார்டின் கப்தில், காலின் மன்ரோ களமிறங்கினர். துவக்க மட்டையாளர்கள் இருவரையும் இந்திய அணியின் பந்துவீச்சாளர் போல்ட் ஆக்கினார். 

sikar

 இதன் மூலம் முகமது சமி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கனே வில்லியம்சன் மட்டும் 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாகி குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

sikar

இதன்மூலம் நியூசிலாந்து அணி 158 ரன்களை இந்திய அணிக்கு சவாலாக நிர்ணயித்தது. இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர்.

சிறப்பாக ஆடிய தவான் இந்த ஆட்டத்தில் 10 ரன்களை கடந்தபோது ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்சில் 5000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் விராட் கோலி  114 இன்னிங்சில் 5000 ரன்கள் அடித்து அதிக ரன் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை செய்திருந்தார்.