ஆசிய லெவன் அணிக்காக விளையாடவுள்ள 4 இந்திய வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

ஆசிய லெவன் அணிக்காக விளையாடவுள்ள 4 இந்திய வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!


Indian players for asia XI tean

பங்களாதேஷின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் 100 ஆவது பிறப்பு ஆண்டினை முன்னிட்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஆசிய லெலன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கான இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகள் வரும் மார்ச் 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் டாக்காவில் நடைபெறுகிறது.

இந்த போட்டிகளுக்கான ஆசிய லெவன் அணிக்காக விளையாடவுள்ள 4 இந்திய வீரர்களின் பெயர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதில் விராட் கோலி, தவான், முகமது சமி மற்றும் குலதீப் யாதவ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

Asia XI

இந்த தொடருக்கான முழு வீரர்கள் பெயர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஆசிய லெவன் அணியில் பாக்கிஸ்தான் வீரர்கள் இடம்பெறபோவதில்லை என அறிவித்த பிறகே இந்தியாவின் சார்பில் வீரர்கள் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.