இந்திய அணிக்கு எதிராக, தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர்! முகம் சோர்ந்த தமிழக ரசிகர்கள்!

இந்திய அணிக்கு எதிராக, தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர்! முகம் சோர்ந்த தமிழக ரசிகர்கள்!



indian-play-for-south-africa


இந்தியாவைச் சேர்ந்தவர்களும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் பிற நாட்டு கிரிக்கெட் அணிகளில் விளையாடியுள்ளனர். இலங்கை அணியின் முத்தையா முரளிதரன், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், தென் ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் ஆம்லா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தநிலையில் தென் ஆப்பிரிக்க சர்வதேச அணிக்காக தமிழர் ஒருவர் விளையாடுகிறார் என தெரியவந்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனுரான் முத்துசாமி என்ற வீரர் விளையாடி வருகிறார். செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான். தமிழரான அவர் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு எதிராக, இந்திய மண்ணில் அறிமுகம் ஆகியுள்ளார்.

india vs sA

25 வயது ஆகும் செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தென்னாப்பிரிக்க நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் இடம் பிடித்து ஆடி வந்தார். இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளரான செனுரான் முத்துசாமி ஆல் ரவுண்டராக விளையாடுகிறார்.

டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு ஓவர் மட்டும் பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் முத்துசாமி. விசாகப்பட்டினம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணிக்கு எதிரான போட்டி முத்துசாமிக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.