லோகேஷ் ராகுலை முதலில் இந்தியா அனுப்புங்க; ஆவேசத்துடன் சுனில் கவாஸ்கர்.!indian-cricket-team---sunil-kavasker---rahul

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக விளையாடாத லோகேஷ் ராகுலை டிக்கெட் எடுத்து இந்திய அனுப்புமாறு ஆவேசமாக விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3T-20 ,4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்பொழுது டெஸ்ட் போட்டி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

cricket

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்து செய்தது இந்திய அணி. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் முக்கிய வீரர்களான வார்னர், ஸ்மித் இல்லாத நிலையிலும் 146 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

ஒரு அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்து முக்கிய பங்கு வகிப்பது அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தான். ஆனால் இந்திய அணியில் துவக்க மட்டையாளராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் இரண்டு போட்டிகளிலுமே சொற்ப ரன்கள் மற்றும் டக் அவுட்  
என்ற முறையில் வெளியேறியது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

cricket

இந்த நிலையில் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவிக்கும்போது: 
“தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. அணி வெற்றிப் பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.

அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். ஸ்மித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியவில்லை என்றால் இதுகுறித்து சிந்தித்தே ஆக வேண்டும். தேர்வுக் குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.

பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் லோகேஷ்ராகுல். எஞ்சிய 2 டெஸ்டில் அவர் விளையாடக் கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணிக்கு வந்து ஆட வேண்டும்.

எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று மிக காட்டமாக விமர்சித்து இருந்தார்.