விளையாட்டு

ரிஷபன்ட்: நான் சாதனைகள் படைத்தாலும் தோனி தான் இந்தியாவின் ஹீரோ.!

Summary:

indian cricket player rishaphant

என்னதான் நான் சாதனைகள் புரிந்தாலும் இந்தியாவின் ஹீரோ தோனி தான் எப்பவுமே அவர்தான் தல என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷபாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவி இல்லாமல் தற்சமயம் ஒரு சாதாரண வீரராக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த நிலையில் தற்சமயம் ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அவர் ஓய்வை அறிவித்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இடம்பிடிக்க இந்திய இளம் வீரர்க ளிடம் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த ரிஷபான்ட் தற்சமயம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

Image result for RISHAPHANT

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணியில் இடம்பெற்ற ரிஷபன்ட் உலக சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார். அதாவது இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 கேட்ச் பிடித்து அசத்தினார் பண்ட். 

இதன் மூலம் இவர், ஒரே டெஸ்டில் அதிககேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் (11 கேட்ச், எதிர்- பாகிஸ்தான், 2013), முன்னாள் இங்கிலாந்து வீரர் ரசல் (11 கேட்ச், எதிர்- தென் ஆப்ரிக்கா, 1995) ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார்.

Related image 

இதில் மற்றொரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்னவென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை புரிந்த முதல் வீரர் ரிஷபன்ட் தான் என்பது பெருமைக்குரியது.

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறுகையில், ‘தோனி தான் இந்தியாவின் ஹீரோ. கிரிக்கெட் வீரராக அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எதாவது சிக்கல் இருந்தால், அதை உடனடியாக அவரிடம் கேட்டு தீர்வு பெறுவேன். நெருக்கடியான நேரத்தில் அமைதியாக இருந்து 100 சதவீதம் வெற்றிக்காக செயல்பட வேண்டும். உலக சாதனை படைப்பேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மைல்கற்கள் நல்லது தான்.’ என்றார். 


Advertisement