பயிற்சியின் போது இந்திய வீரருக்கு பலத்த அடி! சுருண்டு விழும் பரிதாப வீடியோ
பயிற்சி ஆட்டத்தின் போது பேட்ஸ்மேன் அடித்த பந்து தலையில் பட்டு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்திய வீரர் அசோக் டிண்டா.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியவர் அசோக் டிண்டா. மேலும் தனது சிறப்பான செயல்பாட்டுக்காக இந்திய அணியில் இடம் பிடித்து சில போட்டிகளில் விளையாடினார்.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்தும் விதமாக தற்போது கொல்கத்தாவில் நடைபெறும் சையது முஸ்தாக் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அப்போது ஒரு போட்டியின் போது பேட்ஸ்மேன் அடித்த பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அசோக் திண்டாவின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெரிதான பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.