இந்தியா விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்! ஜப்பானுடன் மோதி அசத்தல் சாதனை படைத்த இந்திய அணி!

Summary:

India won in junior world cup cricket against japan

19 வயதுக்கு உட்பட்டோருக்கான  13ஆவது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 16அணிகள் பங்கேற்று உள்ளனர். அவர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றனர். 

அதனைத்தொடர்ந்து புளோம்பாண்டீனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியுடன் மோதியது. பகல்1.30 மணியளவில் தொடங்கிய இந்த போட்டியில் முதலாவதாக ஜப்பான் அணி பேட்டிங் செய்தது. அதை தொடர்ந்து 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன் எடுத்து ஆட்டத்தை இழந்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தை அடைந்தது.


Advertisement