இந்திய அணி டமால் டுமீல் வெற்றி!. ஆஸ்திரேலிய அணிக்கு காலை உணவாக தோல்வியை படைத்த இந்திய அணி!.

இந்திய அணி டமால் டுமீல் வெற்றி!. ஆஸ்திரேலிய அணிக்கு காலை உணவாக தோல்வியை படைத்த இந்திய அணி!.



india won by 137 runs

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. எனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். 

மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார். 

test cricket

இதனையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகமான ரன்கள் எடுத்து இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்கலாம் என்ற எண்ணம் தவிடுபொடியானது.

test cricket

பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், லியான் 6 ரன்களுடனும் களத்தில் சிறப்பாக ஆடினர்.

test cricket

ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், அங்கு கடும் மழை பெய்து வருவதால் ஆட்டம் தடைபட்டது.  பின் னர் உணவு இடைவேளையின்போது மழை நின்றிருந்ததால் அதன்பின் போட்டித் தொடங்கியது. 

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கம்மின்ஸ் விக்கெட்டை, பும்ரா அபாரமாக வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணியின் அடுத்த விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தி இந்திய அணி 137 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

test cricket

இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான பும்ரா, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா, ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.