என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
மழை நின்றுவிட்டது! ஆட்டம் எப்போது துவங்கும்? ஐசிசி சொல்வது என்ன?

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை, பாகிஸ்தான்- இலங்கை, வங்காள தேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது.
தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 7.3 ஓவர்களில் மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது நடப்பு உலகக் கோப்பை போட்டியில்தான்.
அதேபோல் இன்று பலம் வாய்ந்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தற்போது வந்த தகவல் படி மழை நின்றுவிட்டது. ஆனால் 3 மணிக்கு தான் மைதானம் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே ஆட்டம் எப்போது துவங்கும் என தெரியும் என்று ஐசிசி அறிவித்துள்ளது
சர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி இன்று நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆனல் நாட்டிங்காம் மைதானத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் இரு அணிகளின் பயிற்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது.அதே போல் நியூசிலாந்து அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இன்று இரு அணிகள் மோதும் போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஆனால், வானிலை முன்னறிவிப்பு வெளியிட்ட தகவல் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது . ஆம், நாட்டிங்காமில் இன்று 90 சதவிதம் மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது இதன் மூலம், இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிந்தது.
ஆனால் தற்போது ஐசிசி நிறுவனம் கூறியதாவது மழை நின்று காரணத்தினால் ஆட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் ஆனால் மூன்று மணிக்கு மேல் தான் மைதானத்தை ஆய்வு செய்த செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளது.
Update - If there is no further rain, there will be an inspection at 10.30 AM local time#CWC19
— BCCI (@BCCI) 13 June 2019