இந்திய அணி படு தோல்வி..! மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய, வங்கதேச வீரர்கள் - வைரல் வீடியோ..! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

இந்திய அணி படு தோல்வி..! மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய, வங்கதேச வீரர்கள் - வைரல் வீடியோ..!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. நேற்று நடந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெஸ்வால் 88 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து 178 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர்.

போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, ரன் இலக்கும் 170 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து, வங்கதேச அணி வெற்றிபெற்று, உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

வங்கதேச அணி வெற்றிபெற்றதை அடுத்து அந்த அணியின் வீரர்கள் மைதானத்திற்குள் வந்து வெற்றியை கொண்டாடினார்கள். அந்த சமயம், வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மைதானத்திற்க்குள்ளையே இரண்டு அணி வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஓடி வந்து இந்திய அணி வீரர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo