முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் முத்திரை பதிக்குமா இந்திய அணி..!

முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் முத்திரை பதிக்குமா இந்திய அணி..!


India-Bangladesh Test match will begin today at the Zahoor Ahmed Stadium in Chattogram.

இந்தியா-பங்களாதேஷ்  அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- பங்களாதேஷ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. கேப்டன் ரோஹித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதால் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில்லுடன், கே.எல்.ராகுல் களமிறங்குவார்.

பங்களாதேஷ்- ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். மிடில் ஆர்டரில் விராட் புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குவர். பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி பவுலர்கள் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஸர் பட்டேலை அணி அதிகம் நம்பியுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.