விளையாட்டு

5 போட்டிகளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..! முதல் முறையாக இந்த இடத்திற்கு வந்துள்ள KL ராகுல்.!

Summary:

ICC t20 ranking list KL rahul got second place

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 5 - 0 என்ற கணக்கில் மாபெரும் வெற்றிபெற்று முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் T20 தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த 5 போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

அதிலும் குறிப்பாக, தொடக்க வீரர் KL ராகுல் அணைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதோடு கீப்பர் பணியையும் சிறப்பாக செய்தார். இந்த 5 போட்டிகளிலும் அதிக ரன்கள் (224) எடுத்து முதல் இடம் பிடித்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் ராகுல்.

இந்நிலையில் சர்வதேச T20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களின் பட்டியலை ஐசிசி சமீபாத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 823 புள்ளிகள் பெற்று முதல் முறையாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் KL ராகுல். 879 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஷம் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த 5 போட்டிகளிலும் சிறப்பாக விளாடியதே ராகுலின் இந்த அபார முன்னேற்றத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.


Advertisement