வெளியான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியல்! கெத்து காட்டும் விராட், ரோஹித்! முழு விவரங்கள்!

வெளியான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியல்! கெத்து காட்டும் விராட், ரோஹித்! முழு விவரங்கள்!


icc-ranking

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது.. அதில், ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி,ரோகித் சர்மா தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், துணை கேப்டன் ரோகித் ஷர்மா 855 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 829 புள்ளிகளுடன் , 4வது இடத்தில் நியூஸிலாந்தின் ராஸ் டைலர், 5ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டு பிளசிஸ் ஆகியோர் உள்ளனர்.

icc rank

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 719 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளார். முஜீப் உர் ரஹ்மான் 701 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளார்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் நபி முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இடத்தில உள்ளார். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் இமாத் வசிம், நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராண்ட்ஹோம், இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் 3, 4, 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர். இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா  எட்டாவது இடத்தில் உள்ளார்.  முதல் 10 இடங்களில் வந்த ஒரே இந்தியர் ஜடேஜா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.