கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே.... ஹர்திக் பாண்டியா தவறவிட்ட கேட்சால் தலைகீழாக மாறிய ஆட்டம்.!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே.... ஹர்திக் பாண்டியா தவறவிட்ட கேட்சால் தலைகீழாக மாறிய ஆட்டம்.!



harthik pandya missed catch yesterday

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-ன் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 188 ரன்கள் குவித்தது. இதனையடுத்து  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

நேற்றய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து திணறி கொண்டிருந்தார். அப்போது யாஷ் தயல் போட்ட பந்தை லாங் ஆப் திசை நோக்கி ஜோஸ் பட்லர் அடிக்க ஹர்திக் பாண்டியா கைக்கு எளிதான கேட்சாக அது சென்று கொண்டிருந்தது. ஆனால் பாண்டியா திடீரென சறுக்கி கீழே விழுந்தநிலையில் பந்து அவரை தாண்டி பவுண்டரிக்கு சென்றது.


அந்த கேட்சை கோட்டை விட்டதற்கு குஜராத் அணி மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கிய பட்லர் 56 பந்துகளில் 89 ரன்களை குவித்தார்.  ஹர்திக் பாண்டியா அந்த கேட்சை பிடித்திருந்தால், குஜராத்தின் வெற்றி இன்னும் சுலபமாகியிருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.