முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா குஜராத்.? பரபரப்பான இன்றைய ஆட்டம்.!

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா குஜராத்.? பரபரப்பான இன்றைய ஆட்டம்.!


gujarat vs mumbai indians match today

ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன்  கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். எனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.

இந்தநிலையில் புள்ளி பட்டியலில் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். எனவே இன்று இன்று நடைபெறவுள்ள  51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வதற்காக குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி முனைப்புடன் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.