தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இனி இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை.! காரணம் இதுதான்.. கவுதம் கம்பீர் ஓப்பன் டாக்.!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் துணை கேப்டன் ரஹானேவின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் புதிய துணைக்கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஹானேவின் ஆட்டம் கடந்த சில மாதங்களாக அந்தளவிற்கு இல்லாத காரணத்தினால், அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் ரஹானே நீக்கப்பட்டது குறித்து கூறுகையில், துணை கேப்டன் என்ற காரணத்தினால் மட்டுமே ரஹானே அணியில் நீடிக்கிறார். அவருடைய ஆட்டம் தற்போது மிகவும் மோசமாக உள்ளதால் அவரது இடத்தினை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது.
மேலும், ஷ்ரேயாஸ் ஐயரின் வருகையும் இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து உள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அவர் தொடர்ந்து ரன் குவிக்காத பட்சத்தில் அவர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. ரஹானே துணை கேப்டன் பொறுப்பில் இருந்ததால் மட்டுமே அணியில் நீடித்து வந்தார் என்றும் தற்போது ரோஹித்துக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதே ரஹானேவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகத்தான். தன்னைப் பொறுத்தவரை, இனிவரும் போட்டிகளில் ரஹானே விளையாடுவது கேள்வி குறி தான் என கம்பீர் கூறியுள்ளார்.