விளையாட்டு

கொரோனாவை விட கொடியவர் சர்வான்! கொடூரமாக கொட்டித்தீர்த்த கெயில்! அதற்கு சர்வான் என்ன கூறியுள்ளார்?

Summary:

Gayle scolding sarvaan

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும் சி.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் அந்த சீசனில் அவரை ஜமைக்கா அணி விடுவித்தது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது.

ஜமைக்கா அணியில் இருந்து தன்னை வெளியேற்றியதற்கு அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான சர்வான் தான் முக்கிய காரணம் என்று கெய்ல் குற்றம் சாட்டினார். கொரோனாவை விட கொடியவர் சர்வான், நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார் என தெரிவித்திருந்தார். மேலும் சர்வானை கெய்ல் திட்டித் தீர்த்தார்.

இந்த நிலையில் கெய்லின் குற்றச்சாட்டை மறுத்து சர்வான் விளக்கம் கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு சி.பி.எல். போட்டிக்கான ஜமைக்கா அணியில் இருந்து கெய்லை நீக்க எடுத்த முடிவில் எனது பங்கு எதுவும் கிடையாது. கெய்ல் வெளியிட்ட வீடியோ பதிவில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி பலருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.

நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகம் ஆனதில் இருந்து கெய்லுடன் தான் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவரது திறமை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. மேலும் அவர் எனது நண்பரும் ஆவார். ஆனால் அவரது இத்தகைய தவறான குற்றச்சாட்டுகள் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் புதிய அணியில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்என சர்வான் கூறியுள்ளார். 


Advertisement