இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி! அவர் எத்தனையாவது தலைவர் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல துணைத் தலைவர் பதவிக்கு மகிம் வர்மா, செயலாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் மகன் ஜெய், பொருளாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமல் ஆகியோர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
It's official - @SGanguly99 formally elected as the President of BCCI pic.twitter.com/Ln1VkCTyIW
— BCCI (@BCCI) October 23, 2019
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், மும்பையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், இதில் அணைத்து பதவிகளுக்கும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தனர். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார்.
இதனையடுத்து அருண் துமல் பிசிசிஐ பொருளாளராகவும் பதவியேற்றார். கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ், இணைச் செயலாளராகவும், மஹிம் வர்மா என்பவர் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.