விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தில் வெறித்தனமாக ஆடிய ஸ்பார்க் கெய்க்வாட்.! தோனியை பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார் தெரியுமா?

Summary:

எம்.எஸ்.தோனியுடன் பேட்டிங் செய்வதை நான் எனது வாழ்நாள் கனவாக நினைத்திருந்தேன் என ருத்துராஜ் கெய்க்வாட் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டியின் 44வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய படிக்கல் மற்றும் பின்ச் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். 

இதனையடுத்து களமிறங்கிய விராட் மற்றும் ஏபிடி அருமையான ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர்.  இதனையடுத்து 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.


டுபிளசிஸ் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய துவக்க வீரர் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய கெய்க்வாட்  51 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வின்னிங் சாட்டை அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருத்துராஜ் கெய்க்வாட்  65 ரன்களுடனும், எம்எஸ் தோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய வெற்றிக்கு பிறகு தோனி சொன்ன ஸ்பார்க் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார் என அனைவரும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்தநிலையில், எம்.எஸ்.தோனியுடன் பேட்டிங் செய்வதை நான் எனது வாழ்நாள் கனவாக நினைத்திருந்தேன் என ருத்துராஜ் கெய்க்வாட் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement