விளையாட்டு

வெளிநாட்டு வீரர்களால் சிஎஸ்கே அணிக்கு ஏற்படும் புதிய சிக்கல்.. ரசிகர்கள் கவலை!

Summary:

Foreign players in csk will be joined late

ஐபிஎல் 2020 அடுத்த மாதம் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை யூஏஇ-யில் நடைபெறவுள்ளது. இதற்கு இந்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது.

இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சென்னையில் இருந்து யூஏஇக்கு புறப்படுகின்றனர். அதற்கு முன்னதாக 5 நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டூப்ளஸிஸ் மற்றும் நிகிடி செப்டம்பர் 1 ஆம் தேதி தான் யூஏஇக்கு புறப்பட உள்ளனர். மேலும் கரீபியன் தொடரில் கலந்துகொள்ளும் ட்வெய்ன் பிராவோ, மிச்செல் சான்ட்னர் மற்றும் இம்ரான் தாஹிர் எப்போது யூஏஇக்கு பயணம் செய்வார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

அதேபோல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடரில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹாசல்வுட் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் ஆகியோர் செப்டம்பர் மாதம் மத்தியில்தான் சிஎஸ்கே அணிக்காக விளையாட வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே தனது ஆரம்ப போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் அரை பலத்துடன் தான் களமிறங்கும்.


Advertisement