வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் தீவிபத்து.! வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இவர் போட்டிகளில் பங்கேற்றபோது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டநிலையில், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆயுட்கால தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து இந்த தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 2020-ம் ஆண்டு முதல் அணைத்து கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரீசாந்த் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது.
ஸ்ரீசாந்த்தின் வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. இங்கு அவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதியில் கரும்புகை கிளம்பியுள்ளது. பின்னர் காற்று பலமாக வீசியதை தொடர்ந்து சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் வீட்டின் முன்பக்க அறை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் தீ விபத்தின் போது வீட்டில் ஸ்ரீசாந்த், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.
இதனைத்தொடர்ந்து இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.