மைதானத்திற்குள் ஓடி வந்து காலில் விழுந்த ரசிகர்; கணப்பொழுதில் தோனி செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

மைதானத்திற்குள் ஓடி வந்து காலில் விழுந்த ரசிகர்; கணப்பொழுதில் தோனி செய்த நெகிழ்ச்சியான சம்பவம்



fan-rushed-to-ground-and-fell-in-dhonis-leg

இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யும்பொழுது நடைபெற்ற ஒரு சில தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது. முதலில் பந்து வீசிய இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கிட்டத்தட்ட 3 கேட்சுகள் தவறவிடப்பட்டன. ஒரு சில பவுண்டரிகளையும் தடுத்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்து இருக்க முடியாது. மேலும் பேட்டிங்கிலும் ஒரு சில முக்கியமான தருணங்களில் ரன்களை எடுக்கத் தவறியது மற்றும் விக்கெட்டுகளை இழந்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

cricket

இருப்பினும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இந்திய அணியில் முன்னாள் கேப்டன் விக்கெட் கீப்பர் தோனி இன்றும் தரமான சம்பவம் ஒன்றை செய்து காட்டினார். இந்திய அணிக்கான முதல் விக்கெட்டை குல்தீப் யாதவ் பெற்றுத் தந்தார். இதற்கு பெரும் பங்கு வகித்தவர் தோனி. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் செய்த ஸ்டம்பிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த ஆட்டத்தின் இடையில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கொடியுடன் தோனியை நோக்கி ஓடி வந்தார். ஓடி வந்த அவர் கையில் கொடியுடன் தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்பொழுது தரையில் விழ போன தேசியக்கொடியை தோனி மிக வேகமாக கையில் எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் ஒரு இந்திய குடிமகனாக தேசியக்கொடியை எப்படி மதிக்க வேண்டும் என்று அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.