விளையாட்டு

கொரோனா கட்டுக்குள் வராத நிலையில், இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் அறிவிப்பு!

Summary:

England vs srilanka test date announced

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் 34 லட்சத்து ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39,615 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் இதுவரை 10 லட்சத்து 83 ஆயிரத்து 816 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.


அனைத்து நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களும் பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த நிலையில், கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் இலங்கையில் 2 டெஸ்டுகள் விளையாட இருந்தது இங்கிலாந்து அணி. இதற்காக இலங்கைக்குச் சென்று 10 நாள்கள் தங்கியிருந்து ஒரு பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 


Advertisement