ஒரே நாளில் 334 ரன்கள்.. அசுர பலத்துடன் பாக்கிஸ்தானை பந்தாடும் இங்கிலாந்து!England top on first day of 3rd test

சௌதாம்ப்டனில் நேற்று துவங்கிய பாக்கிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து - பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நேற்று  துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

Eng vs pak 3rd test

துவக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாக் க்ராலே நங்கூரமாய் நின்று விளையாட துவங்கினார். இங்கிலாந்து அணியின் சிப்லே(22), ரூட்(29), போப்(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

பின்னர் 5 ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த க்ராலே மற்றும் பட்லர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். க்ராலே தனது முதல் சதத்தினை விளாசினார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. க்ராலே 171, பட்லர் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.