பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை கதறவிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! இமாலய இலக்கு

England thrased bangladesh bowlers


England thrased bangladesh bowlers

அம்பயரை முட்டி தூக்கிய ஜேசன் ராய்! சதம் அடித்தும் கொண்டாட முடியாத சோக நிகழ்வு

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 12வது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 386 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

wc2019

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மற்றும் பெயர்ஸ்டோவ் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இருவருமே அரைசதத்தை கடந்தனர். 51 ரன்கள் எடுத்த நிலையில் பெயர்ஸ்டோவ் ஆட்டம் இழந்தார். வரும் முதல் விக்கெட்டிற்கு 128 ரன்கள் எடுத்தனர்.

wc2019

அதனைத் தொடர்ந்தும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் சதம் அடித்தார். அவருக்கு துணையாக வந்த ஜோ ரூட் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜாஸ் பட்லர் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்.

wc2019

சதமடித்த ஜேசன் ராயும் ஒருபக்கம் வெளுத்து வாங்கத் துவங்கினார். மெஹதி ஹாசன் வீசிய 35 ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஜேசன் ராய் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 150 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பட்லர் 64, மோர்கன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

wc2019

அவர்களைத் தொடர்ந்து வந்த ஸ்டோக்ஸ் உடனே அவுட்டாக பின்னர் வந்த கிரீஸ் வோக்ஸ் மற்றும் ப்ளங்கட் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசினர். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இமாலய இலக்கை எட்டி பிடிக்குமா வங்கதேசம்?