உடல்நிலை மோசமான நிலையில் முன்னாள் வீரர்.! நேற்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டனின் செயலால் குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

உடல்நிலை மோசமான நிலையில் முன்னாள் வீரர்.! நேற்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டனின் செயலால் குவிந்துவரும் பாராட்டுக்கள்.!


england captain wear former player t shirt

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தீவிர சிகிச்சை பெற்று வரும் முன்னாள் வீரரின் பெயரிட்ட டி-சர்ட்டை அணிந்து வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரகாம் தோர்பெ, உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய டெஸ்ட் போட்டியில் தோர்பெயின் பெயரிட்ட, 564 எண் கொண்ட டி-சர்ட்டை அணிந்துக் கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'தோர்பெயின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பது நாங்கள் அனைவரும் அறிவோம். நாங்கள் அவரை மிகவும் விரும்புகிறோம், மேலும் தோர்பெ எங்களுக்கு மேலானவர். இந்த கடினமான சூழலில் நாங்கள் தோர்பெ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.