இந்திய அணி இதை செஞ்சு 66 வருஷம் ஆச்சு.. இப்போ இந்திய மண்ணில் வைத்து 66 வருட சாதனை முறியடித்த இங்கிலாந்து அணி.. விவரம் இதோ

இந்திய அணி இதை செஞ்சு 66 வருஷம் ஆச்சு.. இப்போ இந்திய மண்ணில் வைத்து 66 வருட சாதனை முறியடித்த இங்கிலாந்து அணி.. விவரம் இதோ


England breaks indias 66 years record

66 வருடங்கள் கழித்து இந்திய அணியின் சாதனையை முறியடித்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றநிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்தது.

இந்த 329 ரன்களில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த 329 ரன்களையும் இந்திய அணி வீரர்கள் அடித்தே எடுத்தனர். வைடு, நோ-பால், பை, லெக் பை என எக்ஸ்ட்ராவாக ஒரு ரன் கூட இங்கிலாந்து அணி வீரர்கள் கொடுக்கவில்லை. இதனால் எக்ஸ்டரா முறையில் ஒரு ரன் கூட இல்லாமல், இந்திய அணி வீரர்கள் 329 ரன்களையும் அடித்தே எடுத்தனர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியின் 66 வருட சாதனையை முறியடித்துள்ளது. ஆம், 1955-ல் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எக்ஸ்ட்ராவாக ஒரு ரன்கூட விட்டுக் கொடுக்காமல் பாகிஸ்தானை 328 ரன்னிற்க்கு ஆல்-அவுட் ஆக்கியது.

தற்போது 66 ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் சாதனையை, இந்திய மண்ணில் வைத்தே முறியடித்தது இங்கிலாந்து அணி.