பெங்களூரு அணியை காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்.! அஸ்வின் வீசிய "ப்ரீ ஹிட்" பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட வேற லெவல் வீடியோ.!dinesh karthik played very well in yesterday match

2022 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 169 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1வது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 173 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின்  தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தின் 13.3 வது ஓவரில் அஸ்வின் நோ பால் வீசியதன் காரணமாக தினேஷ் கார்த்திக்குக்கு ப்ரீ ஹிட் கிடைத்தது. அந்த ப்ரீ ஹிட் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட தினேஷ் கார்த்திக், ஒரு பெரிய சிக்சரை பறக்கவிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.