விளையாட்டு

தல தோனி குறித்து மீண்டும் இணையத்தில் ட்ரெண்டான தகவல்! கொந்தளித்து மனைவி சாக்ஷி கொடுத்த பதிலடி!

Summary:

Dhoni wife sakshi tweet for dhoniretires trending

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவரது திறமையான ஆட்டத்தால் ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மேலும்  இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. ஆனால் 2019 உலககோப்பைக்கு பிறகு தோனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என பல தகவல்கள் கிளம்பியது. 

ஆனால் 2020 ஐபில் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் தோனி பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், ரசிகர்களுக்கு அவர் மீண்டும் அணியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை எழுந்தது.ஆனால் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் விளையாட்டு வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் #DhoniRetires என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வைரலாகி வந்துள்ளது. இதனைக் கண்ட தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், இவை அனைத்தும் வதந்தி. லாக் டவுன் மக்களை மனநிலையற்றவர்களாக மாற்றியுள்ளது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என கடுமையாக சாடியுள்ளார். ஆனால் அந்தப் பதிவு வைரலான நிலையில்  சில மணிநேரங்களிலேயே அதனை  சாக்ஷி டெலிட் செய்துவிட்டார். இந்நிலையில் #DhoniRetirs, #DhoniNeverRetires என மாறி தோனி ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 


    


Advertisement