விளையாட்டு

தோனி அனைவருக்கும் இதை கற்றுக்கொடுத்துள்ளார்.. நடிகை அனுஷ்கா பெருமிதம்!

Summary:

Dhoni taught to make habit of winning anushka

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவானாக திகழ்ந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் தோனி குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷெட்டி தோனியை புகழ்ந்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "வெற்றிக்கு பின்னரும் மற்றொரு வெற்றி என்பது சாத்தியம் என்ற நம்பிக்கையை தோனி ஊட்டியுள்ளார்.

வெற்றியை பழக்கமாக்கி கொள்வது எப்படி என தோனி அனைவருக்கும் கற்றுகொடுத்துள்ளார். மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவையும் தோனி நினைவாக்கியுள்ளார். தனது ஓய்வு மூலம் தோனி யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தோனியின் ஓய்வு வருத்தமளித்தாலும் அவர் விதைத்த விதையில் பல சாம்பியன்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளார். தோனியின் எதிர்கால வாழ்க்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என அனுஷ்கா பதிவிட்டாள்ளார்.


Advertisement