மீண்டும் தோனிக்கு ஓய்வு! அதிர்ச்சியளித்த இந்திய அணி தேர்வு

மீண்டும் தோனிக்கு ஓய்வு! அதிர்ச்சியளித்த இந்திய அணி தேர்வு


dhoni-left-out-again-againt-south-africa

மேற்கிந்திய தொடர் முடிந்த பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாட உள்ளது. 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இதில் முதலில் துவங்க இருக்கும் டி20 தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஆடிய அதே அணியை தான் இந்தியா தேர்வு செய்துள்ளது. கூடுதலாக ஹார்டிக் பாண்டியா மட்டும் இணைந்துள்ளார். 

MS Dhoni

இரண்டு மாத ஓய்வு கேட்டிருந்த தோனிக்கு இந்த தொடரில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதற்காக இளம் வீரர்களான கலீல் அகமது, சைனி, தீபக் சாகர், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்டியா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் தோனிக்கு நீண்ட நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தோனி இந்திய அணியில் எப்போது ஆட்ப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.