நேற்றைய ஐபில் போட்டியின் போது புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்! துள்ளி குதிக்கும் டெல்லி ரசிகர்கள்!

நேற்றைய ஐபில் போட்டியின் போது புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்! துள்ளி குதிக்கும் டெல்லி ரசிகர்கள்!dhavan new record


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 37 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயித்த 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.

sikar

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஐ.பி.எல்-ல் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஷிகர் தவாண் படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி வீரர் ஷிகர் தவாண் 41 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்தார்.

இதுவரை 153 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள தவாண், 502 பவுண்டரிகள் மற்றும் 91 சிக்சர்கள் அடித்துள்ளார்.