தல தோனியின் திடீர் ஓய்வு முடிவு! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ன கூறியுள்ளார் தெரியுமா?



deputy cm ops talk about MS Dhoni


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது.

 கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரானா அரையிறுதி போட்டியில் ஆடினார் தல தோனி. அதன்பிறகு தோனி எந்த ஒரு சர்வேதச போட்டிகளிலும் விளையாடவில்லை. தோனியின் ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தன்னுடைய கடின உழைப்பு மற்றும் கிரிக்கெட்டின் ஆழ்ந்த உணர்வுகளின் மூலம் கிரிக்கெட்டின் வெற்றிமுனைக்கு இந்தியாவை தோனி கொண்டு வந்துள்ளார். அவருடைய நிதானம் பல பாதகமான சூழ்நிலைகளை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி தந்துள்ளது. அவர் எப்போதும் மக்களின் இதயத்தில் கூல் கேப்டன் என்ற இடத்தைப் பிடிப்பார்" என குறிப்பிட்டுள்ளார்.