விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டம் மொத்தமாக மாறியிருக்கும்.! கவனித்தீர்களா...

Summary:

நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டம் மொத்தமாக மாறியிருக்கும்.! கவனித்தீர்களா...

ஐபிஎல் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி ஓரளவிற்கு நிதானமாக ஆடியது. ஆனால் இறுதிக்கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஆனால் டெல்லி அணி சிறிய தவறு செய்து பைனல் போகும் வாய்ப்பை இழந்தது. நேற்றைய ஆட்டத்தின் இறுதியில், பாப்பரப்பான சூழ்நிலையில் ரபாடா இருக்கும் போது கடைசி ஓவரை டாம் கரனிடம் கொடுத்தது சென்னை அணிக்கு சாதகமாக இருந்தது. கடைசி ஓவருக்கு, 13 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், தோனி களத்தில் நிற்கிறார். அந்த சமயத்தில் தோனியின் பேட்டிங்கைப் பற்றி நன்கு அறிந்த ரபாடாவை பந்து வீச அனுப்பியிருந்தால் சென்னை அணிக்கு அது சிரமமாய் இருந்திருக்கும்.

குறைந்த வேகத்தில் வரும் பந்துகளை தோனி இடதுகையில் சிறப்பாக கையாளுவர் என பலருக்கும் தெரியும். அந்த சூழ்நிலையில் ரபாடாவிடம் கடைசி ஓவரை கொடுக்காமல் டாம் கரனிடம் கொடுத்தது தவறான முடிவு என விமர்சகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை ரப்படாவிடம் கடைசி ஓவரை கொடுத்திருந்தால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement