விளையாட்டு

தொடர்ந்து இரண்டாவது முறை சொதப்பிய சென்னை அணி! மாஸ் காட்டிய டெல்லி அணி.!

Summary:

delhi capital won the CSK

2020 ஐபிஎல் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட் ஏதும் பறிகொடுக்காமல் நிதானமாக ஆடியது. இதனையடுத்து டெல்லி அணி 20
ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை ஆரம்பத்திலேயே தடுமாறியது. சென்னை அணியில் அதிகபட்சமாக டுப்லெஸில் 43 ரன்களும், ஜாதவ்  26 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.  44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

2020 ஐபிஎல் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி அசத்திய சென்னை அணி, கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தூவியடைந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவதுமுறை டெல்லி அணியிடம் தோல்வியடைந்துள்ளது.


Advertisement