விளையாட்டு

கிரிக்கெட் உலகின் தாதா சௌரவ் கங்குலியின் மகளா இது! ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

Summary:

daughter of sourav ganguly

கிரிக்கெட் உலகின் தாதா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்குவங்கம் கொல்கத்தாவைச் சேர்ந்த சவுரவ் கங்குலி தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்து வருகிறார்.

1992 முதல் 2008ம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் சவுரவ் கங்குலி. இந்திய அணிக்காக இவர் செய்த சாதனைகள் எண்ணற்றவை. துவக்கம் ஆட்டக்காரரான இவர் டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களும் அடித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்களில் இவரும் ஒருவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரம்பத்தில் இவர் பல சாதனைகள் புரிந்தாலும் தனது கடைசி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். 

தொடர்புடைய படம்

சவுரவ் கங்குலி டோனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சனா என்ற மகள் மட்டும் உள்ளார். இன்று மகள் சனாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் சவுரவ் கங்குலி. பதினேழு வயது நிரம்பிய மகளுடன் அவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த சவுரவ் கங்குலி லிட்டில்-பிக் சூப்பர் ஸ்டார் என செல்லமாக வாழ்த்தியுள்ளார். 


Advertisement