சென்னை அணியின் அசத்தல்.! பஞ்சாப் அணியின் கனவை அடித்து நொறுக்கிய சிஎஸ்கே.!

சென்னை அணியின் அசத்தல்.! பஞ்சாப் அணியின் கனவை அடித்து நொறுக்கிய சிஎஸ்கே.!


csk-won-kings-11-pinjab

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது. சென்னை அணியை பொருத்தவரை ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது. ஐந்து ஓவர்கள் வரை விக்கெட்டுகள் கொடுக்காமல் ஆடிய பஞ்சாப் அணி அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 30 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார்.

csk

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் இருவரும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக ஆடிய டு பிளசிஸ் 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துவக்க வீரராக களமிறங்கி இறுதிவரை களத்தில் நின்ற ருத்ராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார். அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.