சென்னை அணிக்கு அடுத்த அடி.! முக்கிய வீரர் திடீர் விலகல்.! என்ன காரணம்.?

சென்னை அணிக்கு அடுத்த அடி.! முக்கிய வீரர் திடீர் விலகல்.! என்ன காரணம்.?


csk player leavesin ipl due tohis marriage

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில், அதிக போட்டிகளில் வெற்றிபெற்று குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதிக ரசிகர்களை கொண்ட சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று, மற்ற 5 போட்டியில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து முக்கியமான சிஎஸ்கே அணி வீரர் ஒருவர் வீரர் விலகியுள்ளார். தொடர் தோல்வியில் தத்தளிக்கும் சிஎஸ்கே அணிக்கு இது மேலும் ஒரு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான கான்வே ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
கான்வேக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனை முடித்துவிட்டு தேனிலவுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கான்வேக்கு திருமணம் இருப்பதை அறிந்து தான், தோனி அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கான்வே திரும்பி வந்ததும் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.