விளையாட்டு

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தோணி செய்த காரியம்! அதிர்ச்சியான ரசிகர்கள்!

Summary:

CSK Captain dhoni slept at floor in airport

ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நேரத்தில் கோப்பையை வெல்ல அணைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகிறது. 23 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை அணி முதல் இடத்திலும், கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளது.

சென்னையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வென்று சென்னை அணி முதல் இடத்தை பிடித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 108 ரன் மட்டும் எடுத்திருந்த நிலையில் 109 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஒருசில போராட்டங்களுக்கு பிறகே வெற்றிபெற்றது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை ஜெய்ப்பூரில் நடக்கிறது. சிஎஸ்கே அதற்காக இன்று விடியற்காலை விமானத்தில் ஜெய்ப்பூருக்கு சென்றது சென்னை அணி. விடியற்காலை விமானம் என்பதால் தூக்க கலக்கத்தில் இருந்த சென்னை அணியின் கேப்டன் தோணி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் விமான நிலையத்தின் தரையிலையே படுத்து தூங்கினர்.

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோணி இப்படி சாதாரண மனிதர்போல் தரையில் படுத்து தூங்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.Advertisement