காதலிக்கு வைர மோதிரம் அணிவித்த திருமணத்தை உறுதி செய்த ரொனால்டோ! வைர மோதிரத்தின் விலை இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள்....



cristiano-ronaldo-georgina-marriage-news

உலக கால்பந்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் காதல் கதை மற்றும் விலையுயர்ந்த வைர மோதிரம் பற்றிய விவரங்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன.

காதல் தொடங்கிய தருணம்

40 வயதான ரொனால்டோ, ஐந்து குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். 2016ஆம் ஆண்டு Gucci ஸ்டோரில் இருவரும் முதன்முதலாக சந்தித்தது அவர்களின் காதல் வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் திருமணம் இல்லாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

குடும்பமும் குழந்தைகளும்

2010ஆம் ஆண்டு ரொனால்டோ முதன்முறையாக தந்தையானார், அந்த மகன் தற்போது 14 வயதாகி கால்பந்து போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். 2017ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளும், அதே ஆண்டில் ஜார்ஜினா மூலம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 2022ஆம் ஆண்டு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் உயிரிழந்ததால், தம்பதியினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

இதையும் படிங்க: கோலி சோடா படத்தில் ATM ஆக நடித்த நடிகையை நிபாகம் இருக்கா! அவரது வீடியோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வைரல் வீடியோ...

கிறிஸ்டியானோ ரொனால்டோ

விலையுயர்ந்த வைர மோதிரம்

திருமணத்தை உறுதி செய்யும் வகையில், ரொனால்டோ தனது காதலிக்கு விலையுயர்ந்த வைர மோதிரம் அணிவித்துள்ளார். ஜார்ஜினா அணிந்திருக்கும் அந்த மோதிரம் 15 முதல் 30 காரட் வரை இருக்கும் என்றும், அதன் விலை 2 முதல் 5 மில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரொனால்டோவின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களாக, அதாவது சுமார் 10,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது.

ரொனால்டோ–ஜார்ஜினா திருமணம் கால்பந்து ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருக்கும் பிரபல வாழ்க்கை ஆர்வலர்களுக்கும் மிகப்பெரும் செய்தியாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: மகளின் பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டாமாக நடத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! வைரல் வீடியோ....