டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளக்கிவிடப்பட்டாலும்; இங்கிலாந்து மண்ணிலேயே அரை சதம் அடித்து அசத்திய தமிழன்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளக்கிவிடப்பட்டாலும்; இங்கிலாந்து மண்ணிலேயே அரை சதம் அடித்து அசத்திய தமிழன்.


cricket-muralivijay-india

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  5 டெஸ்ட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டெஸ்ட் அணியில் தமிழகத்தை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார்.முதல் இரண்டு போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்க தவறியதால்  இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார் முரளி விஜய்.

முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து மற்ற போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது  இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்து விட்ட  நிலையில்
இந்திய பேர்ட்ஸ் மென்களில் கேப்டன் விராட் கோஹ்லி மட்டும் சிறப்பாக விளையாடினார்.புஜாரா ஒரு சில போட்டிகளில் ஆடினார்.மற்ற பேர்ட்ஸ் மேன்கள் யாரும் 
பெரிதாக சோபிக்கவில்லை.

Tamil Spark

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் நன்கு அனுபவம் வாய்ந்த முரளி விஜய்க்கு மற்ற போட்டிகளில் வாய்பளிக்காதது வேதனைக்குரியது.
 
இந்தியா திரும்பிய அவர், ‘இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். ‘அதன்படி இங்கிலாந்து சென்ற அவர், அந்த அணியுடன் இணைந்தார். எஸ்ஸெக்ஸ் அணியும் நாட்டிங்கம் அணியும் மோதும் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய நாட்டிங்கம் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

Tamil Spark

இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், 95 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு கவுண்டி போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் அக்‌ஷர் படேல், 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.