டர்பன் அணிந்து பஞ்சாப் சிங் போன்றே மாறிய கிறிஸ் கெய்ல்!! என்ன காரணம் தெரியுமா?? வைரல் புகைப்படம்

டர்பன் அணிந்து பஞ்சாப் சிங் போன்றே மாறிய கிறிஸ் கெய்ல்!! என்ன காரணம் தெரியுமா?? வைரல் புகைப்படம்


Chris gayle look panjab singh viral photo

பஞ்சாப் சிங் வேடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உலகளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில். யூனிவெர்சல் பாஸ் என அழைக்கப்படும் இவர் சர்வதேச போட்டிகள் மட்டுமின்று ஐபில் போட்டியிலும் விளையாடிவருகிறார்.

தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் கெய்ல் இந்தமுறை 8 போட்டிகளில் விளையாடி 178 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனிடையே ஐபில் போட்டிகளும் தற்போது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் கெய்ல் தற்போது மாலத்தீவிற்கு சென்று தனது விடுமுறை நாட்களை கழித்துவருகிறார்.

இந்நிலையில் பஞ்சாபி டாடி என்ற ஆல்பம் பாடலுக்காக அவர் சிங் போன்று வேடமிட்டுள்ளார். தலையில் டர்பன் அணிந்து, பார்ப்பதற்கு பஞ்சாப் சிங்க் போன்று இருக்கும் கெயில், நாளை வரை ஷூட்டிங்காக காத்திருக்க முடியவில்லை, அவ்வளவு ஆர்வமாக உள்ளேன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.