சென்னை அணிக்கு முதல் ஓவரில்லையே காத்திருந்த அதிர்ச்சி! சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை அணிக்கு முதல் ஓவரில்லையே காத்திருந்த அதிர்ச்சி! சோகத்தில் ரசிகர்கள்!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 38 போட்டிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் பெங்களூர், சென்னை அணிகள் இடையேயான போட்டி பெங்களூரின் சொந்த மண்ணில் இன்று நடைபெற்றுவருகிறது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.
162 என்ற சற்று எளிமையான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரில்லையே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரது இடத்தை நிரப்ப களமிறங்கிய ரைனா சற்றும் எதிர்பாராத விதமாக அடுத்த பந்திலையே ஆட்டம் இழந்தார். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு விக்கெட்டும், ஆறாவது பந்தில் ஒரு விக்கெட்டையும் மொத்தம் 6 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்து சென்னை அணி தடுமாறி வருகிறது.