இன்றும் ரசிகர்களின் ஏக்கத்தை நிறைவேற்றாத தோணி! ஆரம்பமானது ஆட்டம்!

இன்றும் ரசிகர்களின் ஏக்கத்தை நிறைவேற்றாத தோணி! ஆரம்பமானது ஆட்டம்!


chennai-chose-bowl-against-to-srh

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் கைதராபாத் அணிகள் இடையேயான போட்டி இன்று சென்னையின் சொந்த மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இதுவரை நடந்த 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய  உறுதியாகிவிடும். இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை சென்னை, கைதராபாத் அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 போட்டிகளில் சென்னை அணி 8 போட்டிகளிலும், கைதராபாத் அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

IPL 2019

வெற்றி சதவீதத்தை பொறுத்தவரை சென்னை அணி இன்று வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றிபெறவேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

சென்னை அணியில் ஹர்பஞ்சன் சிங்  சேர்க்கப்பட்டுள்ளது சென்னை அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. மேலும் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோணி பீல்டிங்கை தேர்வு செய்து அதிரடி முடிவெடுத்துள்ளார்.

IPL 2019

இதுவரை நடந்த 10 போட்டிகளில் சென்னை அணி அதிகமுறை இரண்டாவது பேட்டிங்கையே தேர்வு செய்துள்ளது. இது தோனியின் வெற்றி சீக்ரட்டாக இருந்தாலும் ஒருமுறையாவது சென்னை அணி முதல் பேட்டிங் செய்து அதிரடியாக விளையாடும் என்ற சென்னை அணி ரசிகர்களின் ஏக்கத்தை இன்றும் தோணி நிறைவேற்றவில்லை. தோனியின் இந்த அதிரடி முடிவு அணியின் வெற்றிக்கு கைகொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.