விளையாட்டு

படுதோல்வியின் எதிரொலி; மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி பழிதீர்க்குமா?

Summary:

can india take revenge in this game

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்த தொடரின் 4 மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி படு மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி பதினைந்தாவது ஓவரிலேயே வென்று இந்திய அணியை குறைந்த பந்துகளில் வென்ற அணி என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் சென்ற போட்டியில் மிக மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த தோனி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த சாமி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கலீல் அஹ்மது மற்றும் குல்தீப் யாதவிற்கு பதிலாக களமிறங்குகின்றனர். 


Advertisement