விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையில் அதிரடி மாற்றம்!

Summary:

byju's logo in indian tean jersey

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனங்கள் அவ்வப்போது மாறிக் கொண்டே வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் தற்போது புதிதாக BYJU'S நிறுவனம் இணைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்ஷிப் இது வந்தது OPPO மொபைல் நிறுவனம். தற்பொழுது இந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடைந்ததை ஒட்டி புதிய ஸ்பான்சர்ஷிப்புக்கான போட்டி நடைபெற்றது.

தற்போது இந்த ஒப்பந்தத்தினை கல்விக்கான இந்தியாவின் மிகச்சிறந்த மொபைல் ஆப்பான BYJU'S நிறுவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 2022 மார்ச் மாதம் வரை இந்த நிறுவனத்தின் லோகோ இந்திய வீரர்களின் சீருடையில் இருக்கும்.

தற்போது இந்திய வீரர்களின் சீருடையில் இருக்கும் OPPO லோகோ அகற்றப்பட்டு புதிய லோகோ அடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இருந்து பயன்படுத்தப்படும்.


Advertisement