தமிழக மக்களே.. ரொம்ப கவலையா இருக்கு..! இதை செய்யுங்கள்..! மு.க.ஸ்டாலினை டாக் செய்து வீடியோ வெளியிட்ட பிராவோ.!bravo talk about corona

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து நாளுக்கு நாள் பல உயிர்களை பறித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பல்வேறு பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீரருமான டுவைன் பிராவோ, அவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை டாக் செய்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பிராவோ பதிவிட்டுள்ளார். நம்மால் நமது குடும்பத்தினர்கள் பாதிக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் சாம்பியன்கள். விரைவில் கொரோனாவிலிருந்து மீள்வீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.